மத்திய அரசின் பட்ஜெட்டில், இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரி குறைப்பின் மூலம், நடுத்தர மக்களின் வரிச்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்புகள், முதலீடு ஆகியவை அதிகரிப்பின் மூலம், வேலை வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். வரி குறைப்பின் மூலம் நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறையும் என்றும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என கூறினார். வேளாண்துறையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் மூலம், விவசாயிகளின் வருவாய் இரு மடங்கு உயரும் என்றும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார். மேலும், நிர்மலா சீதாராமனுக்கும், அவரது குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தார்.