தமிழகத்தில் 97 சதவீதம் பேருக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, தமிழக அரசினால் மாவட்டத்தோறும் தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், 97.72 சதவீதம் பேர் நாள்தோறும் 40 லிட்டர் சுத்தமான குடிநீர் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், நடப்பு பட்ஜெட்டில்10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.