தமிழக அரசின் பட்ஜெட் 2019 – 2020 : சிறப்பம்சங்கள்…

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நிதிநிலை அறிக்கையுடன் சட்டப்பேரவை வளாகம் வந்த, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். பின்னர், இருவரும் நிதிநிலை அறிக்கை பெட்டியை ஊடகங்களுக்கு காண்பித்தனர். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய அவர், 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக குறிப்பிட்டார். 

திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றிய அவர், அமைதி, வளம், வளர்ச்சி என்ற முழக்கத்தை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். 

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

தமிழக தனி நபர் வருமானம் 2017-18 ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 267 ரூபாயாக உயர்வு.

தமிழக பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 51.86% ஆக உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.

கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் முதல் முறையாக 500 மின்சார பஸ்களை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை.

சிறுபான்மையினர் நலத்துறைக்காக ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு .

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.284.70 ஒதுக்கீடு.

 அத்திகடவு அவினாசி திட்டத்திற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு. 

நபார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.811 கோடி நிதி ஒதுக்கீடு.

 விபத்தில் நிரந்தர ஊனமடைவோருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

 கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை கட்டித்தர ரூ.1700 கோடி ஒதுக்கீடு. 

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிதாயண்டில் 3000 ஸ்கூட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்துக்கு 1 லட்சம் நிவாரணம்.

மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.167 கோடி ஒதுக்கீடு.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்.

அரசு பல்கலை. , கல்லூரிகள் உட்டகட்டமைப்பு வசதிகள் மேம்பட ரூ.269 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக காவல் துறை

தமிழக காவல் துறையை நவீனமயமாக்க ரூ.111.57 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நுண்ணீர் பாசன திட்டம்

சூரிய சக்தி பம்பு செட்டுகள் இயக்க அரசு சார்பில் 90 சதவீத மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள துணை முதல்வர், நுண்ணீர் பாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக ரூ.1361 கோடி செலவில் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

வேளாண் காப்பீடு திட்டம்

பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ் 21.70 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த ஓ பன்னீர் செல்வம்,  2019-20ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும் ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்தும் நபருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்க வரும் நிதியாண்டில் இலக்கு நிர்ணயம்.

விலையில்லா மாடு, ஆடு வழங்கும் திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும் என தெரிவித்த துணை முதல்வர்,  திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்.

மீன்பிடித் தடைக்கால உதவித்தொகைக்காக ரூ170.13 கோடி.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு.

ஹார்வேர்டு போன்ற மற்ற சர்வதேச பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்.

160 ஐசாட் – 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் 

அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறிய முதல்வர், இத்திட்டத்திற்காக ரூ.000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறைக்கு ரூ.12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசு மருத்துவமனைகளில் முக்கியஉடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்ய திட்டம்.

ரூ.2,685.91 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சுகாதார சிரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

மீனவர் நலன்

மீனவர் நலனில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக கூறிய துணை முதல்வர், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், பாக் விரிகுடா பகுதியில் ரூ.1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மீன்பிடி துறைமுகங்களை கட்ட தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்ப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்.

2019-20ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு.

ஏழை எளிய, நலிவடைந்த பிரிவினருக்கு எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறுவதை உறுதி செய்ய புதிய திட்டம்.

ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்ய புதிய திட்டம்.

பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், மற்றும் பொருட்கள் வாங்க ரூ. 247 கோடி ஒதுக்கீடு.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ. 12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ. 14,315 கோடி.

அரசின் கடன் சுமை ரூ. 42,000 கோடியாக அதிகரிப்பு.

அரசின் வருவாய் 14 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு.

ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 18,273 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 28,757 கோடி ஒதுக்கீடு.

பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 2,276 கோடி.

12,000 புதிய பேருந்துகள், 2000 பேட்டரி பேருந்துகள் வாங்க திட்டம்.

ரூ. 10,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க அரசு உத்தேசம்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஆயிரத்து 170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைவினை மற்றும் கதர் துறைக்கு 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தொழில்துறைக்கு 2 ஆயிரத்து 747 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்ப்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,584 கோடி ஒதுக்கீடு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ. 476 கோடி

இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 281 கோடி ஒதுக்கீடு

கைவினை, கதர் துறைக்கு ரூ. 211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ. 140 கோடி

தொழில்துறைக்கு ரூ. 2,747 கோடி ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ. 100 கோடி

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில். 28.34 லட்சம் பேர் பயன்

சமூக நலத்துறைக்கு ரூ. 5,305 கோடி ஒதுக்கீடு

Exit mobile version