பட்ஜெட் மீது விவாதம் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் -சபாநாயகர் தனபால்

தமிழக பட்ஜெட்டின் மீதான பொது விவாதம் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதில் உரை வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், 17ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், 18ம் தேதியும் பொது விவாதம் தொடரும் எனத் தெரிவித்தார். 19ம் தேதி எதிர்கட்சித் தலைவர்களின் விவாதமும், 20ம் தேதி துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் பதில் உரையும் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்தார்.

Exit mobile version