கல்வித்துறைக்கான புதிய கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கல்வியை அளிக்கும் வகையில் கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டு மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் இந்தியாவில் கல்வி கற்க வாருங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்த அவர் தேசிய திறன் வளர்ப்பு திட்டத்திற்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியிட்டார். அறிவியல் துறை மாணவர்களுக்காக 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 2021க்குள் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என குறிப்பிட்ட அவர் தேசிய அளவிலான தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்த கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் பட்டப்படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.