2020-21ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஹுஸ்டன் பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி கற்பித்தலைக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடியே 8 லட்சம் ரூபாயும், தொல்லியல்துறைக்கு 31 கோடியே 93 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த, உலகத் தரம்வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12 கோடிய 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.