சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

2025-ம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதி ஆண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.52,800 கோடி என்ற அளவில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிலையில், 2021-ல் சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த “ஆயுஷ்மான் பாரத்’  திட்டத்தின் மூலம், மேலும் 112 மாவட்டங்களில் சிகிச்சைகள் வழங்க திட்டம்  வகுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Exit mobile version