இனி ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை ..!

2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் வருமான வரி சதவீதத்தைக் குறைத்து அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

தனிநபர் வருமானத்தில் 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 5 லட்சம் ரூபாய் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் இனி 20% வருமான வரி கட்டத்தேவையில்லை, 10% கட்டினால் போதுமானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதே போல 7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20% வருமான வரி கட்டத் தேவையில்லை. 15% கட்டினால் போதுமானது. 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்ட தேவையில்லை, இனி 20% வரி கட்டினால் போதுமானது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அதே போல 12.5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 30% வரி கட்டாமல், 25% வரி கட்டினால் போதும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Exit mobile version