தமிழக அரசை வசைப்பாடும் சுயநலவாதிகளுக்கு, பொதுநலத்தால் பதிலடிக் கொடுத்திருக்கிறது தமிழக பட்ஜெட். அதில் இடம் பெற்று இருக்கும் பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்து சற்று சுருக்கமாக காண்போம்.
இயற்கைக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள் விவசாய பெருமக்கள்… அவர்களின் நலனை காக்க என்றும் தயங்கியதில்லை தமிழக அரசு… அதற்கு எடுத்துக்காட்டாக வேளாண்மை துறைக்கு 10 ஆயிரத்து 550 கோடியை ஒதுக்கி இருப்பதுடன், 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் என்ற பிரம்மாண்ட திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.
ஒருவரின் மரணம் அவரை சார்ந்திருக்கும் ஏழை எளிய குடும்பத்தினரை நிச்சயம் பாதிக்கும்… அத்தகைய சூழ்நிலையை சந்திப்பவர்களுக்கு உதவிபுரியும் விதமாக, நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது தமிழக அரசு… அதன்படி விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 4 லட்சம் ரூபாயும், நிரந்தர ஊனத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும். ஆயுள் காப்பீடு மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கஜா என்னும் புயல்… லட்சக் கணக்கானோரின் வாழ்க்கையை இருளில் மூழ்க செய்திருக்கிறது… வீடு உடமைகளை இழந்து தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் தகவலை, சபையில் பதிவு செய்துள்ளார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்…..
நிலத்தில் உழும் விவசாயிகளை போல், கடலில் பயணித்து மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 116 கோடி ரூபாய் செலவில், நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில், கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதித்திருப்பதுடன், 80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு, நேவிக் தகவல் பெறும் கருவிகள், ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்பட உள்ளன.
ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் வரியில்லா பட்ஜெட்டை, கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் சுயநலவாதிகளுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பதில் சந்தேகமில்லை.