BSNL நிறுவனம் அதன் கட்டண முறையில் கொண்டு வந்த அதிரடி மாற்றத்தால் jio உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ஏற்பட்ட கட்டண மாற்றங்களால் வாடிக்கையாளர்களை தக்க வைக்க அவ்வப்போது கட்டண சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது கட்டண சலுகையை மாற்றி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரை அந்நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.666 என்ற பிளானில் கட்டணத்தை மாற்றாமல் அதன் சலுகைகளில் மாற்றம் செய்துள்ளது. அதாவது முன்பு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிற்கு டேட்டா வழங்கி வந்த BSNL நிறுவனம் தற்போது 3 ஜிபி என மாற்றியமைத்துள்ளது.மேலும் இதனுடன் தினமும் 100 இலவச குறுந்தகவல்கள் 134 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த ஆஃபரை டிசம்பர் 31ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே பெற முடியும் என்பது தான் இதில் இருக்கும் நிபந்தனை. ஆனால் BSNL-ன் இந்த ஆஃபர் மற்ற நிறுவனங்களின் ஆஃபர்களை விட சிறந்ததாக உள்ளதால் அந்நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.