பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றுக்குப் புத்துயிரூட்டப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் குறித்து உறுப்பினரின் கேள்விக்குத் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துப் பேசினார். அப்போது, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் அரசின் சொத்துக்கள் என்றும், அதனால் அவற்றுக்குப் புத்துயிரூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாயில் 75 விழுக்காடும், எம்டிஎன்எல் நிறுவனத்தின் வருவாயில் 87 விழுக்காடும் ஊழியர்களின் ஊதியத்துக்குச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் ஏர்டெல் நிறுவனம் 3 விழுக்காடும், ஓடபோன் நிறுவனம் ஐந்தரை விழுக்காடும், ஜியோ 4 விழுக்காடும் ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவிடுவதாகக் குறிப்பிட்டார்.