4 ஜி சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 4 ஜி சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தால் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்படும் என்பதால் ஊழியர்கள் பணிகள் திரும்ப வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.