தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனக் கூறி ஏமாற்றி வந்த சகோதரர்கள்

தேனியில் பிரபல தொலைக்காட்சி நிருபர்கள் எனக் கூறி பல்வேறு இடங்களில் பணம் பறித்த சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனியில்   உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வரும் போடியை சேர்ந்த சகோதரர்களான நந்தகுமார் மற்றும் முரளி ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் நிறுவனத்திற்கு மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மின்வாரிய ஊழியர் ஒருவர், அவர்களது நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற போது, அவரை பணி செய்யவிடாமல் தடுத்த இருவரும், தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தாங்கள் பிரபலமான செய்தி தொலைகாட்சியின் செய்தியாளர்கள் எனக் கூறி மின் ஊழியரை தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து மின் ஊழியர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டதில், நந்தகுமார் மற்றும் முரளி ஆகியோர் செய்தியாளர்கள் எனக் கூறி பல இடங்களில் கைவரிசைக் காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version