திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகியோரிடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது அண்ணனை தாமோதரன் தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரை கொலையும் செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெள்ளாறு போலீசார், பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பத்தினருடன் தலைமறைவாக உள்ள தாமோரனை போலீசார் தேடி வருகின்றனர்.