தனுஷுடன் இணையும் அண்ணன் செல்வராகவன்!

நடிகர் தனுஷ், தனது அடுத்த படத்தில் அண்ணன் செல்வராகவனுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து பல புதிய படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். வடசென்னையை அடுத்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைகிறார்.

இதை அடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு ஆக் ஷன் திரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்த படத்துக்கு பிறகு செல்வராகவனும் ,தனுஷும் அடுத்த ஆண்டு இறுதியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வந்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version