அக்.14ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கம்

ப்ரெக்ஸிட் விவகாரத்தில் அக்டோபர் 14ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டன் முடிவு செய்தது. இதையடுத்து, பிரெக்சிட் என்னும் மசோதாவை தாக்கல் செய்து, நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற, பலமுறை நடந்த ஓட்டெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன்படி, பிரதமர் பதவியை, கடந்த மாதம் அவர் ராஜினாமா செய்தார். தற்போது பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். இந்நிலையில் பிரெக்சிட் விவகாரத்திற்காக, பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்க கோரி ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு போரிஸ் ஜான்சன் பரிந்துரைத்தார். இதையடுத்து வரும் அக்டோபர் 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கிவைக்க ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Exit mobile version