இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதால், போரீஸ் ஜான்சன் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கமிட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிலிப் லீ சுந்தந்திர ஜனநாய கட்சிக்கு மாறியதால், பிரதமர் போரீஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். கடந்த மாதம் நடந்த ஜி-7 மாநாட்டில் பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கை தொடர்பாக ஃபிலிப் லீவுக்கும் பிரதமர் ஜான்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிருப்தியில் இருந்த ஃபிலிப் எதிர் கட்சியான சுதந்திர குடியரசு கட்சியில் இணைந்துள்ளார்.
இதனால் நாடாளுமன்றத்தில் போரீஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.