பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விளகியுள்ளதை அடுத்து, புதிய பிரதமருக்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 8 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக 2016ம் ஆண்டு முடிவு செய்தது. இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனர். இதற்கான பிரெக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்த ஆளும் கட்சி தொடர் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெராசா மே அண்மையில் அறிவித்தார். இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், மைக்கேல் கோ, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வாகும் நபர், பிரதமராகவும் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.