ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதி எம்எல்ஏவும் இந்திய தேசிய லோக் தளத்தின் வேட்பாளருமான ஹரி சந்த் மிதா கடந்த ஆண்டு உயிரிழந்ததை அடுத்து, அந்தத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் இடைத்தேர்தலை மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதி, ஹரிசந்த் மிதாவின் மகன், கிருஷ்ணன் மிதாவை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.முதலில் பாஜக மற்றும் இந்திய தேசிய லோக் தளம் கட்சிகளுக்கு இடையில் போட்டி நிலவிய நிலையில், காங்கிரசும் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலாவை வேட்பாளராக களமிறக்கியுள்ளதால் போட்டி பலமாக உள்ளது.
ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட ஜிந்த் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலையொட்டி அங்கு 3 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.