ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் தனது தோட்டத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளார். குறைந்த அளவு தண்ணீர் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட கத்தரிக்காய், 3 மாதங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராகி உள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் செல்வு ஆவதாகவும், செலவினங்கள் போக 60 ஆயிரம் ரூபாய் அளவிற்கு லாபம் கிடைப்பதாகவும் விவசாயி மதியழகன் மகிழ்ச்சி தெரிவித்தார். கத்திரிக்காயை, வியாபாரிகள் விளை நிலத்திற்கே வந்து நல்ல விலை கொடுத்து பெற்றுச் செல்வதாகவும் மதியழகன் கூறினார்.