பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தொழில் புரட்சி செய்யவுள்ளது –  பிரதமர் மோடி

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் இணைந்து புதிய தொழில்புரட்சியை உருவாக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாட்டுக்காக அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இந்த ஆண்டில் இருவருக்குமான 7-வது சந்திப்பு இதுவாகும். சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானையும் அவர் சந்தித்தார். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மோடி, தீவிரவாதம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மூலம் தொழில் புரட்சி செய்யவுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

 

 

 

Exit mobile version