தேத்தாகுடி – புஷ்பவன பால கட்டும் பணிகள் ஆய்வு

வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி – வடக்கு புஷ்பவனம் இணைப்பு பாலத்தை, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேத்தாகுடியில் இருந்து புஷ்பவனத்திற்கு செல்வதற்கு பாலம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, நிதி ஒதுக்கீடு செய்து, பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாலம் கட்டும் பணிகளை இன்று ஆய்வு செய்தார். பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version