கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு விழி பிதுங்கி நிற்கும் நேரத்தில், கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் துவங்கி அனைத்திற்கும் மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர் நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உறவினர்களிடம் அதிகாரத்துடன் பணம் கேட்கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து வார்டுக்கு கொண்டுவருவதற்கு 500 ரூபாயும், வார்டுக்கு வந்தபிறகு 200 ரூபாயும் கொடுத்துள்ளதாக வருதத்துடன் கூறுகிறார்.