அகமதாபாத்தில் 250 தாய்மார்கள் 90 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ருஷினா மருத்துவர் மர்ஃபதியா என்ற 29 வயது பெண் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தைக்கு தாயானார். இவர் கடந்த 3 மாதங்களில் தனது தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கி உயிருக்கு போராடிவரும் 5 குழந்தைகளை காப்பாற்ற உதவியுள்ளார்.
இதுகுறித்து ருஷினா கூறுகையில், என் மகனுக்கு அளிக்கக்கூடியதை விட அதிமாக பால் சுரந்ததை தான் உணர்ந்ததாகவும், இதனால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை தானம் அளிக்க முடிவுசெய்தேன் என்றும் கூறினார். அதன் அடிப்படையில் தனது தந்தையின் உதவியுடன் தாய்ப்பால் வங்கியை கண்டுபிடித்து பின்னர் இந்த 3 மாதங்களில் மட்டும் 12 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்தேன் என்றும் ருஷினா கூறினார்.
அதன் அடிப்படையில், இந்த தாய்ப்பால் வங்கி மூலம் கிட்டத்தட்ட 250 தாய்மார்கள் தங்களது 90 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்துள்ளனர். இந்த தாய்மார்களின் மனிதநேயமிக்க செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.