கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உடைப்புகள்

கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே சரி செய்யும் நெடுஞ்சாலை துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில், பெய்து வரும் கனமழை காரணமாக, நெடுஞ்சாலையை ஒட்டிய ஓடைகளில் லேசான உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை பெய்யக்கூடும் என்பதால் அவைகள் முழுவதுமாக உடையும் அபாயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓடைகளில் ஏற்பட்டுள்ள சிறிய உடைப்புளை சரி செய்யும் விதமாக, ஜேசிபி இயந்திங்களை கொண்டு, நெடுஞ்சாலை துறையினர் சரி செய்து வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், தண்ணீர் புகாமல் இருக்க மண் மூட்டைகளை அடுக்கி, பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை தடுக்கும் விதமாக போர்கால அடிப்படையில் சரி செய்து வரும் நெடுஞ்சாலை துறை பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version