வேலூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த முனியம்மா என்பவர் வெளிநாட்டில் உள்ள தனது மகனை பார்க்க சென்றிருந்தார். அருகில் உள்ள முனியம்மாவின் உறவினர்கள் வீட்டை சுத்தம் செய்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டின் பீரோ திறந்த நிலையில் இருப்பதை கண்டனர். பீரோவில் இருந்த 55 சவரன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்