பிரேசிலைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் எட்வர்டோ ஸ்ரூர் ஒரு துளி வர்ணத்தைக் கூட பயன்படுத்தாமல் பாலிதீன் கவர்களை கொண்டு அழகிய ஓவியங்களை உருவாக்கி அசத்தியுள்ளார்.
பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவது குறித்து கவனம் ஈர்க்கும் வகையில் நதிகளிலும், தெருக்களிலும் கிடக்கும் மறுசுழற்சி பாலிதீன் கவர்களைப் பயன்படுத்தி,
பிரபலமான பிக்காசோ, வான்கோ, மோனெட் உள்ளிட்டோரின் ஓவியங்களையும், பல்வேறு ஓவியங்களையும் உருவாக்கி காட்சிக்கு வைத்துள்ளார்