அமேசான் காட்டுத்தீயை அணைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பிரேசில்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய காடான அமேசானில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பிரேசிலின் ராணுவமும் ஈடுபட்டு வருகிறது.

இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயாராக உள்ளதாக ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. ஆனால் அந்த உதவியை பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரே ஏற்கவில்லை. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிகாவின் உதவியை நாடியுள்ளது பிரேசில்.

இது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு பிரேசில் அதிபரின் மகன் எடுவார்டோ போல்சோனரே மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்துள்ளனர். ட்ரம்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து ஜெயர் போல்சோனரேவிடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version