ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் தடுப்பூசி தரமாக இல்லை என்று கூறி பிரேசில், அதனை திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 91 சதவீதம் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று ரஷ்யா அறிவித்தது.
இதனையடுத்து ஸ்புட்னிக் தடுப்பூசியை உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கின.
இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசி எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றும், மருந்தில் அடினோவைரஸ் உயிருடன் இருப்பது கண்டு அறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை மறுத்துள்ள ரஷ்யா, சில நாடுகள் ஸ்புட்னிக் தடுப்பூசி விசயத்தில் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது.