‘பிரம்மோஸ்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களுடன், புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தரை, கப்பல் மற்றும் ஆகாய மார்க்கமாக எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது. இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு வேகமாக சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவை. 290 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும். இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களுடன் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஒரிசாவின் சந்திப்பூர் கடல் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் பிரமோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணையின் தாக்கும் திறன் 450 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version