ஜெயம் ரவி நடித்த ‘ அடங்க மறு ‘ திரைப்படத்தை தடை செய்ய கோரிய வழக்கில், மத்திய,மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கனகவேல் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவி நடித்து, கார்த்திக் தங்கவேல் இயக்கிய அடங்க மறு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் வழக்கறிஞர்கள் சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும், வசனங்களை ஒலி குறைப்பு செய்ய வேண்டும், படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிர்மல் குமார், சரவணன் ஆகியோர் அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.