கோடை சீசன் துவங்கியுள்ளதையடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் உதகையில் பசுமை கூடி காணப்படுவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பொட்டானிகல் கார்டனில் பேன்சி, சால்வியா, சூரியகாந்தி மற்றும் டேல்யா போன்ற மலர்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது.இதனை சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்த படி கண்டு ரசித்து செல்பி எடுத்து செல்கின்றனர்.