சென்னையில் 13 துறைகளுடன் இணைந்து போசன் அபியான் திட்டம் !

சென்னையில் 13 துறைகளுடன் இணைந்து போசன் அபியான் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உடலில் உள்ள ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதை அனீமியா என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது.

இந்த குறைபாடு ஆண்டுக்கு 3 சதவீதம் என குறைக்க வேண்டும் என்றும் குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களை அனிமீயா பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. போசன் அபியான் திட்டம் முதற்கட்டமாக சென்னை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே பெண்கள் மற்றும் குழந்தைகளை அனிமீயா பாதிப்பில் இருந்து பாதுகாப்பதாகும். எனவே சென்னையில் இந்த திட்டத்தை குறிப்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version