இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதில் இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை தெரசா மே அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக அக்கட்சியின் 10 எம்.பி.க்கள், பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினர். இங்கிலாந்து மக்களவையில் நடைபெற்ற முதல் சுற்றில் போரிஸ் ஜான்சன் அதிகபட்சமாக 114 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றுக்கான வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இதைதொடர்ந்து போஸ்டல் வாக்கு எண்ணிக்கை முறையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.