பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்பி-க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்த வரை, கட்சித் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி, பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்காக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில், ஜெர்மி ஹண்ட்டை வென்று போரிஸ் ஜான்சன் பதவியை கைப்பற்றினார்.

Exit mobile version