இலங்கை – இந்தியா இடையே எல்லைதாண்டி மீன்பிடிக்கும் சம்பவம்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியா உட்பட வெளிநாட்டு மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு, கடல்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இலங்கை- இந்திய மீனவர்களிடையே எல்லைத்தாண்டி மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடி நடவடிக்கைகள், இருநாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறைந்து விட்டதாக சுட்டிக் காட்டினார். எல்லைதாண்டி மீன்பிடிப்பது பெருமளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்தார்.

Exit mobile version