சாகித்ய அகாடமி சார்பில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி!

தேசிய புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாடமி நடத்தும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாடமி சார்பில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் புத்தகங்களும், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்ற கவிஞர், எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் நவம்பர் 27ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

Exit mobile version