நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தை தொடர்ந்து, பெங்களூருவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக மத்திய மற்றும் மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, பெங்களூரூ காவல் ஆணையர், நகர் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துபடி அவசர சுற்றறிக்கை அனுப்பி “ஹை அலர்ட்” அறிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சி.சிடி.வி கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய பெங்களூர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.