சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.
சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த கடிதம் ஒன்றில், தனக்கு ரயில்வேயில் வேலை கிடைக்காத காரணத்தால் சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.