விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு குறித்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. தொலைபேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version