இந்தியாவின் நடனப்புயல் பிரபுதேவா, கதாநாயகனாக நடித்துவந்தாலும், மறுபுறம் தன்னுடைய நடன இயக்குனர் பதவியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். தற்போது இருபெரும் பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், கத்ரினா கைஃப்-ன் நடன ஒத்திகை சொல்லி தரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த வீடியோவில் பாலிவுட்டின் பிரபல ஸ்டார்களான அமீர்கான், கத்ரினா கைஃப்-ன் நடன ஒத்திகை இடம்பெறுகிறது, அதில் அவர்களை ஆட்டுவிப்பது நமது நடனப்புயல் பிரபுதேவா. தீபாவளி அன்று வெள்ளித்திரையை காண இருக்கும் மிகப் பிரமாண்டமான பாலிவுட் படம்தான் “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்”. இந்தியாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன், அமீர்கான், கத்ரினா கைஃப், பாத்திமா சானா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் ரசிகர்களை சந்திக்க வருகிறது இந்த திரைப்படம். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படத்தை பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த படம் ஏற்படுத்தியதுதான். இதனால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த நேரத்தில், படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றிற்காக, அதன் நடன இயக்குனர் பிரபுதேவா பயிற்சி அளிக்க, அமீர்கான் மற்றும் கத்ரினா கைஃப் பயிற்சி எடுக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.