அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர் செப்டம்பர் மூன்றாம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.
இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏழாயிரத்து 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 அப்பாச்சி ஏஎச் 64 வகை ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான உடன்பாடு இரு நாடுகளிடையே கையொப்பமாகியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் முதல் அப்பச்சி ஹெலிகாப்டர் இந்திய அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டரை விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி செப்டம்பர் மூன்றாம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படைத்தளத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.