குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில், பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் 100 அடி சாலையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த நிலையில், நேற்று வள்ளுவர்கோட்டத்தில் இருந்து வந்த லாரியில் குப்பைகளை ஊழியர்கள் தரம் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு, பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version