அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதியின் உடல், லட்சக்கணக்கானோரின் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கு இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. ஒரு பல்கலைகழகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, கருப்பு உடை அணிந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஈரான் நாட்டுக் கொடிகளை ஏந்திய மக்கள், அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். காசிம் சுலைமானி உடலுக்கு ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி தலைமையில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.