பாம்பன் இரயில் பாலம் அருகே பழுதான விசைப்படகு

பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய விசைப் படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் அருகே பழுதான விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக படகானது பாறையில் மோதி நின்றது. காற்றின் வேகம் மேலும், அதிகரித்தால் பாம்பன் ரயில் பாலத்திற்கு ஆபத்து என உள்ளூர் மீனவர்களின் தகவலையடுத்து, உடனடியாக படகை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 4 தேதி முதல் பாம்பன் இரயில் பாலத்தில் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் மோதியுள்ள இரும்பு விசைபடகு இராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version