ஹன்ஸ் ஸிம்மரின் இசையை பயன்படுத்தும் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம்!!!

BMW எலெக்ட்ரிக் கார்களில் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரின் இசை பயன்படுத்தப்பட உள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW இப்போது ஐ-4 வகை எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள இந்த கார், ஃபிஃப்த் ஜெனரேஷன் இ டிரைவ் சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ள இந்த காருக்கு வெறும் 6 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே நூறு கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த காருக்கு மேலும் சிறப்பூட்டும் வகையிலும், தனித்தன்மையை மெருகேற்றும் வகையிலும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரின் இசைக்கோர்வையை பயன்படுத்த BMW திட்டமிட்டுள்ளது. BMW i-4 எலெக்ட்ரிக் காருக்கான சிக்னேச்சர் ஒலியை உருவாக்கும் வேலையில் ஹன்ஸ் ஸிம்மர் ஈடுபட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஹன்ஸ் ஸிம்மர், கிளாடியேட்டர், மேன் ஆஃப் ஸ்டீல், இன்செப்சன், இண்டெர்ஸ்டெல்லார் உள்ளிட்ட பல குறிப்பிடத்தகுந்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version