நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ்

நித்யானந்தா எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேசக் காவல் துறையான இன்டர்போலிடம் கர்நாடக சிஐடி காவல்துறை முறையிட்டுள்ளது.

கர்நாடகாவில் சிஷ்யை ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நித்யானந்தாவைக் காவல்துறை தேடி வருகிறது. இது தொடர்பான வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், தற்போது வரை நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, சர்வதேசக் காவல் துறையான இன்டர்போலிடம் கர்நாடக சிஐடி முறையிட்டுள்ளது. ஒரு நாட்டில் தேடப்படும் குற்றவாளி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றால் அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்.

நித்யானந்தாவுக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இன்டர்போலின் அதிகாரத்திற்கு உட்பட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்படும். தங்களது நாட்டில் நித்யானந்தா உள்ளாரா இல்லையா என்ற விவரத்தை அந்த நாடுகள் இன்டர்போலுக்குத் தெரிவிக்கும்.

 

Exit mobile version