கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறை

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதங்கள் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி லைசென்சுகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை தவிரக் கள்ளத்துப்பாக்கிகளும் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. தற்போது ஆயுதச் சட்டத்தின் கீழ் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்குக் குறையாமலும், அதிகப்பட்சம் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தண்டனையை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் ஒரு வரைவு ஆயுதச் சட்டத் திருத்தத்தைத் தயாரித்துள்ளது.

Exit mobile version