நீலகிரி முதுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், வனக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அறிய வகை கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்டு வியப்படைந்தனர்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, கரடி, யானை, சிறுத்தை மற்றும் கழுதை புலி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது மழை பெய்துள்ளதால், வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. மாலை நேரங்களில் சாலையோரம் உலா வரும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், முதுமலை சிறியூர் வனப்பகுதியில் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அறிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று, குட்டையில் தண்ணீர் அருந்திய காட்சியை கண்டு வியப்படைந்தனர். வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவது வழக்கம் என்றாலும், ஆனால் அரிய வகை கருஞ்சிறுத்தையை காண்பது மிக மிக அறிது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version