பா.ஜ.க தொண்டர்கள் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் : இல.கணேசன்

அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாஜக – 5 தொகுதிகளிலும், பாமக – 7 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தொண்டர்கள் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version